உன்னை நம்பு ....!

உன்னால் முடியுமென
உன்னை நம்பு
உலகம் உன்னை நம்பும் ....!

நாளைய வசந்தகாலம்
உனக்காக காத்திருக்கிறது
என கனவு கண்டு
நிகழ்காலத்தின்
நாட்களின் நகர்வுகளை
கானல் நீராய் கடத்திவிடாதே...

உழைப்பு என்னும் நீர்விட்டு
கனவுகளை சாதனையாக்கு...

இன்று நீ
விழித்தால் தான்
நாளைய நாட்கள்
உனக்கு சாமரம் வீசும் ...!

தோல்விகள் உன்னை
துவட்டி எடுத்தாலும்
அவைகளை படிக்கட்டுகலாக்கு

இளைஞனே ... நீ
வீழ்ந்துகிடப்பது வீரமல்ல
சிலிர்த்து எழு
நாளைய நாட்கள்
உனக்கு வசந்த காலமாகட்டும்...

விழுந்ததற்காக
கவலைப்படாதே
விழுந்தால் தான்
நீ .... எழ முடியும்
எழுந்தால் தான்
சாதனைகள் உனக்கு
சந்தன மாலைகளாகும்...!

உன்னை நம்பு
உலகம் உனக்காக
காத்திருக்கிறது
செவிகளைத்திற
தன்னம்பிக்கை தென்றல்
உள்ளே வரட்டும்
இமைகளைத்திற
வெளிச்சம் உள்ளே வரட்டும்
இதயத்தைத்திற
வெற்றியின் விதைகள்
தன்னம்பிக்கையோடு
உன்னில் விதைக்கப்படட்டும்
சாதனைப்பூக்கள்
உன் முன் பூத்துக்குலுங்கட்டும்

இளைஞனே ...
உன்னை நம்பு
உலகம் உனக்காக
காத்திருக்கிறது....!

எழுதியவர் : வெற்றிநாயகன் (23-Mar-12, 10:52 pm)
பார்வை : 394

மேலே