என்றும் மறவேன்

ஒரு நாள் அறிமுகம்
புதிதாய் நண்பர்கள்
சில வார்த்தைகள் மட்டும்
புதிதில் கொண்டேன்
இதமாய் ஒரு வானிலை
சுகமாய் மலர்ந்திட
இன்பேச்சினில் இன்பம் -அதை
எண்ணி ரசித்தேன்.
விடியும் வரை
அரட்டைகள் அடித்து
விடிந்தபின் குட்நைட் சொல்லி
தூங்கச்செல்லும் நட்பினை நான்
என்றும் மறவேன்
ஊரெங்கும் ஓடித் திரிந்து
கடலிலே நதி கலப்பது போல
உலகமே இதுதான் என்று
நட்பில் கலந்தேன் ......
தொலைதூரப் பயணம் தான்
தொடும்தூரத்தில் வானம் என
தொலைநோக்கு பார்வை
தோழமையில் கண்டேன்....
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லா
உறவும் நீ தான்
தொல்லைகள் தந்த போதிலும்
தொலைந்தேன் சுகமாய்
கனவினை நனவாக்கிடும்
தேசம் இதுதான்
தோல்விகளை கண்டபோதிலும்
நடந்தேன் துணிவாய் .........