இதயம் பேசுகிறது!

அர்த்தமற்று போகிறது
நீ இல்லாத நேரங்களில்
என் கவிதை வரிகள் ...!

கவிதை எழுத நீ இருக்கிறாய்
என்றே ஒரே காரணத்துக்காக
தொடர்ந்து எழுதுகிறேன்
நான் சுவாசிக்கும் காற்றை போல!


உருவம் இல்லா காற்றை போலவே
தேடி பார்க்கிறேன் உன்னை
என் கவிதை வரிகளில் .....!!
நான் உச்சரிக்கும் வார்த்தைகள்
உனக்கு கேட்கிறதா ........?

மனம் யோசிக்கும் போது
கண்கள் பேசும் ..!!
கண்கள் யோசிக்கும் போது
இதயங்கள் பேசும்...!!!
என் கவிதைகளில்
உன்னை பற்றியே பேசுகிறேன்….!!

என் இதயம் பேசுவது உன்னோடுதான்
எத்தனையோ கவிதைகளில்
உண்மையை உன்னிடம் சொல்ல துடிக்குது
என் மனசு மெல்ல மெல்ல…….!!!

எழுதியவர் : (24-Mar-12, 8:41 pm)
பார்வை : 266

மேலே