நட்புக்காக . . . . . .

நண்பா
தாய் வேறாய் ,
தந்தை வேறாய் ,
மதம் வேறாய் ,
இனம் வேறாய் ,
மொழி வேறாய் ,
நாடு வேறாயிருந்தும்
நம் இணைஉக்கு
நட்புதான் - வேராய் யிருந்தது.

நண்பா
அமைதியான வீட்டில்
அம்மா மடியில் படுத்துறங்கும்
நிம்மதி உன்னை
பார்த்தாலே கிடைக்கும் ,
உன்னோடு பேசிக்கொண்டிருக்கையில்
உலகம் மறக்கும் ,
உன்னோடு சேர்ந்து நடக்கையில்
கால்கள் பறக்கும் ,
உன் தவறுகளை -மனம்
உடனே மறக்கும் ,
எனக்கு
என்காதலியை விட
உன்னை ரொம்ப பிடிக்கும் .

நண்பா
பிரிந்து போனாய் - ஏனோ
மறந்து போனாய்
உலக ஆசைகள் அனைத்தையும்
விட்டு விடுகிறேன்
நீ மட்டும் திரும்பி வா போதும்
நீ சுகமாய் வாழ
வாழத்துகிறேன் என்
இதயத்தில் நீ என்றும் வாழவாய்,

ஆலமர விழுதாய்
அஸ்தமன சூரியனாய்
விழ்தாலும் மறைந்தாலும்
என்றும் வாழும் - நட்பு .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ்பாபு ) (25-Mar-12, 4:34 pm)
பார்வை : 516

மேலே