யாரு யாரு இவனோ ?

விரிந்து கிடக்கும் வானம் கூட
சரிந்து போகுமடா!
உயர்ந்து நிற்கும் இமயம் கூட
உடைந்து போகுமடா!
படையே நடுக்கும் பாம்பும் கூட
பயந்து போகுமடா !
யாரு யாரு இவனோ ?
பாயும் புலியும் இவனை கண்டால்
பதுங்கி வாழுமடா!
செடியோ மரமோ இவனை கண்டால்
பூக்கள் தூவுமடா!
கிளியோ குயிலோ இவனை கண்டால்
புகழ்ந்து பாடுமதா!
யாரு யாரு இவனோ ?