"ஒன்றானவன்....."
முகம் தெரியா நண்பணின்
முகத்தில் வினாடி நேர
வியப்பை பார்க்க
விரல்களின் அசைவுகள்
வரிசை படுத்துகின்றன....
அவனை.........
உயிரில் ஒன்றானவன்;
உடலால் இரண்டானவன்;
இலக்கணத்தில் படர்கை என
மூன்றானவன்.........;
உறவிலே நண்பன் என
நான்கானவன்..........
பெயரிலே எழுத்து
எண்ணிக்கையில்
ஐந்தானவன்............;
விளித்து அழைக்கும் போது
"அருமைத்தோழா" என
ஆறானவன்....;
அன்பிலே அவன் நூறானவன்........