என் ஒன்பதாவது அழகி
என் மனைவியின் வயிறு பெருத்திருக்கிறது
ஒரு கற்பிணியின் சமிஞைகள்
பிள்ளை பிறப்பதற்கான மாதம் தொடங்கிவிட்து
அவளின் வயிறு பெருத்திருக்கும்
அழகே தனி
உன் வயிறு கூராக இருக்கிறது
வட்டமாக இருக்கிறது
என்று சொன்னால் போதும்
என்னோடு சண்டையிடுவாள்
எப்படியோ
வயிற்றுக்குள் பிள்ளை இருந்தால் போதும் என்பாள்
அவள் வயிற்றில்
கன்னத்தைப் படுத்துகிறேன்
சொத்தையில் ஒரு உதை
கருவறையில் மகள்
கால்களைச் சுறுட்டிக்கொண்டு படுத்திருக்கிறாள்
முகத்தைப் பார்க்க முடியவில்லை
கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு தூங்குகிறாள்
நனைந்த தலைமுடி
முதுகில் ஒரு மச்சம்
சரி டாக்டர் பார்த்தது போதும்
இவள் பிறந்தால்
எனக்கு ஒன்பது பிள்ளைகள்
என்று கணக்கு வைப்பேன்