புரிந்தது
மாடி வீட்டின் அருமை புரிந்தது
குடிசை வீட்டில் வாழ்பவர்களை
பார்க்கும் போது....
பெற்றோரின் பாசம் புரிந்தது
அனாதை இல்ல குழந்தைகளை
பார்க்கும் போது....
வேலையின் அருமை புரிந்தது
வேலை இல்லாத பட்டதாரிகளை
பார்க்கும் போது....
படிப்பின் அவசியம் புரிந்தது
படிக்க முடியாமல் மூட்டை தூக்கும்
சிறுவர்களை பார்க்கும் போது....
பணத்தின் மதிப்பு புரிந்தது
பிச்சை எடுப்பவர்களை
பார்க்கும் போது.....
இப்படி ஒவ்வொன்றாய் பார்க்கும் போது
ஒவ்வொன்றின் அருமை புரிந்தது ....
இறுதியில் தான் புரிந்தது
நம்மிடம் இருக்கும் ஒன்று
மற்றவர்களிடம் இல்லாத போது தான்
அதன் அருமை புரிகின்றது என்று....
நவீனா.அ