ஜனவரி 1
சில நூறு இனங்கள்
இவ்விகமத்தில் உண்டு
பல்லாயிரம் மொழிகள்
பாரெங்கும் பேசுவதும் உண்டு
அவரவர் இனம் மொழி சார்ந்த
ஆண்டொன்று உண்டு - அதை
பண்பாட்டு சிறப்புடனே
கொண்டாடி மகிழ்வதும் உண்டு
கிறிஸ்து பெருமான் பிறப்பில்
பொதுவான ஆண்டொன்று
இவ்விகமதிலே தோன்றிற்று - அதை
வையகமும் ஏற்றிற்று
வேற்றுமையில் ஒற்றுமை
உற்சாகம் கரைபுரள
உலகெங்கும் விரிந்திற்று
ஜனவரியில் புத்தாண்டு
ஜனவரி ஒன்றன்று
இனிய புத்தாண்டை வரவேற்று
வானதிர வண்ண வேடிக்கையில்
பூமியெங்கும் எழில் கோலமிட்டு
இதயமதில் புதிய நம்பிக்கை ஏந்தி
அகிலமதில் அமைதியை வேண்டியே
மகிழ்ச்சி வசந்தங்கள் தூவி வழங்கிடுவோம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்