பிரிந்தால் தோற்பது காதலாகாது.
மனம் கொண்ட
கள்வனின்
காதலை மறந்து,
பணம் எனும்
காகிதம் மேல் நீ கொண்ட
காதல்,
உன் மேல் நான் கொண்ட
அன்பை மறைத்தாலும்,
உன் அடிமனதின்
கடையோரம் - நம்
காதலின் சுவடுகள்
இருந்தாலே போதும்
நம் காதல்
ஜெயித்துவிடும்!

