மறக்க நினைத்தேன் முடியவில்லை.

மனது முழுவதும் நீ இருக்க,
மறக்க நினைத்தேன் முடியவில்லை.
கண்களால் என்னை கண்டுகொண்டு கலங்கச் சொல்வது நியாயமில்லை.
வார்த்தையில் வரும் பிழையைப் போல,
என் வாழ்க்கையை மாற்றிவிட்டாய்.
இரவில் வரும் கனவைப் போல,
கண்களில் தோன்றி மறைந்துவிட்டாய்.
உடம்பில் ஓடும் குருதியைப் போல,
அங்கும் இங்கும் அலையச் செய்தாய்.
பனி மலையாய் இருந்த என்னை,
எரி மலையாய் எரிக்கச் செய்தாய்.
உன்னாலே இந்த மயக்கம் என்று,
விழுந்தவுடன் புரிந்து கொண்டேன்.

எழுதியவர் : இள.இளங்கண்ணன் (18-Sep-10, 5:12 pm)
சேர்த்தது : Elangkannan
பார்வை : 885

மேலே