நம் காதலின் சாட்சியாய்.....!!!

ஒரு நாள்
அருகருகே இருக்கும்
நம் இருவரின் வீட்டு
மொட்டை மாடியில் தனித்தனியே
உலவிக்கொண்டிருந்தோம் நீயும் நானும்
என் வீட்டு மொட்டை மாடியில்
நின்று நிலவை ரசித்தபடியே
ஒரு கவிதை வாசித்தேன்
என்ன சோகம் நிலவே உனக்கு ?
ஏன் இப்படி கண்ணீர் சிந்தியிருக்கிறாய்
நட்சத்திரங்களாய்? என்று
கவிதை உனக்கு பிடித்துபோக
காதலர்களாணோம் காலப்போக்கில்........

சில மாதங்கள் கழித்து
உனக்கும் எனக்கும் திருமணம்
உனக்கு உன் மாமன் மகனோடும்
எனக்கு என் அத்தை மகளோடும்

மூன்று வருடங்கள் கடந்து
இன்று அதே மொட்டை மாடியில்
நம் காதலின் சாட்சியாய் இருந்த
நிலவை காண்பித்து
உன் மகனுக்கு சோறு ஊட்டுகிறாய் நீ
என் மகனுக்கு நிலவை காண்பித்து
" நிலா நிலா ஓடிவா" என
பாடல் சொல்லித்தருகிறேன் நான்......

நம் இருவரையும் பார்த்து
அழுவதா இல்லை சிரிப்பதா
என புரியாமல்
மேகத்தை இழுத்து
தன் முகத்தை மூடிக்கொண்டது
அந்த கள்ளமில்லாத வெள்ளை நிலா........!!!

எழுதியவர் : jaisee (18-Sep-10, 3:16 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 681

மேலே