என் யோகம்
பேராசை பெருமூச்சி நீயே -என்
ஏக்கத்தை திணர வைத்தாயே
ஆக்கமும் அழிவும் நீயே -என்
ஆணவத்தை அடக்கி வைத்தாயே
அன்பும் அடக்கமும் நீயே -என்
ஆண் கர்வத்தை வென்றவள் நீயே
இன்பமும் துன்பமும் நீயே -என்
இன்னலை மாற்றிடுவாயே
அருகில் வர பயப்படும் சாபம் -நீ
அருகில் இருப்பது என் யோகம்