காற்று ((((((((((((((((((

என் வாசல் வந்து சுவாசம் தந்த
நேசம் கொண்ட காற்றே நீ !
தெற்கிலிருந்து வீசும்
"தென்றல்" காற்றோ ?
வடக்கிலிருந்து வீசும்
"வாடைக்" காற்றோ ?
கிழக்கிலிருந்து வீசும்
"கொண்டல்" காற்றோ ?
மேற்கிலிருந்து வீசும்
"மேலை" காற்றோ ?
ஒவ்வொரு திசையினின்றும்
வீசும் பொழுதும்,
ஒவ்வொரு பெயரை
ஏற்று நிற்ப்பாய் - நீ
எங்கனம் வீசினாலும்
எப்பெயர் தாங்கினாலும் ,
என் உயிர் தாங்கிநிற்கும்
என் சுவாசமே நீயன்றோ !