நில நடுக்கம்!
சேர்த்து வைத்த பொருட்கள் யாவும்
சில நிமிடங்கள் கூட தாங்காதென்றும்
நீங்கள் மறந்துவிட்ட தெய்வங்களின்
பெயர்கள் இவைதான் என்றும்
இது என்னுடையது இது உன்னுடையது
என்பதல்லாது எல்லாம் மண்ணுடையதென்றும்
வெகு நாள் மனிதர்கட்கு அறிமுகமாகாத
மரண பயம் இதுதானென்றும்
எதுவும் நம் கையில் இல்லை!
"நம் வாழ்க்கை உட்பட" என்றும்
நாள் தெரியாது அலைகிறோமே தவிர
முடிவென்பது அனைவரும் அறிந்ததே என்றும்
சில நொடிகளில் சொல்லிச் சென்றது
நடுங்க வைத்த நில நடுக்கம்!