சலிக்காத நினைவுகள்.....

தமிழ் முதல் எழுத்தை முதன்முதலில்
எழுதிய வரைபலகை.....
பள்ளிகூட நுழைவாயில்
விற்கும் நெல்லிகாயை
வாங்க அம்மா குடுத்த
பத்து பைசா........
உடம்பு நீரை உறிஞ்சி
எடுக்கும் கொடும் வெய்யிலில்
மகிழ்ச்சியுடன் துள்ளி
விளையாடிய விளையாட்டுக்கள்.....
மதிய உணவு இடைவெளியில்
உண்ண அமரும்
வேப்ப மரத்தடி நிழல்....
சுதந்திர, குடியரசு அதிகாலை
தினங்களில் துள்ளலுடன்
சென்று வாங்கிய
பொறி மிட்டாய்.....
எப்பவேனும் பௌர்ணமி
நாட்களில் உண்ட நிலா சோறு......
விளையட்டு பொருட்களை
இயற்கை வளம் கொண்டு
உருவாக்கி ரசித்த ரசனைகள்.....
பாட்டி வைத்த மண்சட்டி
பருப்பின் வாசனை.....
இன்னும் எத்தனையோ......

எழுதியவர் : சங்கீதா குணா (12-Apr-12, 5:11 am)
சேர்த்தது : sangeethaguna
பார்வை : 346

மேலே