கல்லூரி வாழ்க்கை
கல்லூரி வாழ்க்கை
--------------------------------------
அறியாமை என்னும் அறிவோடு
காலடி எடுத்து வைத்தோம் கல்லூரியில் ;
பாலைவனத்தில் மழைச் சாரலாய்
புதுமையான அனுபவங்கள்
அறிமுகமான நண்பர்கள்;
கனவுகள் பல சுமந்தும்
கவலைகள் தெரியவில்லை;
தோல்விகள் பல சந்தித்தும்
மனம் தளரவில்லை;
தொடராத துன்பங்கள்;
முடிவடைந்த முரண்பாடுகள்;
இன்பமான இம்சைகள் ;
அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடும் காலமே
தொடருமா இந்த நிரந்தரமற்ற நிம்மதிகள்???!!!