svn கல்லூரி , மதுரை .

கடவுள்கள்
தேவர்கள்
ரிஷிகள்..........
இவர்கள்
வர விரும்பும் ,

அமிர்தத்திற்கு பதில்
அன்பையும் அறிவையும்
அளிக்கும் ,

மரணத்திலும் மரிக்காத
நட்பை கொடுக்கும்,

வாழ்க்கை எனும் கேள்விக்கு
பதில் எழுத கற்று தரும் ,

மனதில் மரமாய்
பதிந்த பசுமைகளை
தரும்,

நான் மீண்டும்
மரமாய் ,
கல்லாய்,
கரும்பலகையாய்,
வகுப்பறையாய் ,
பிறக்க விரும்பும் ,

மண் வாசம்
மாறாத மதுரையில்
மனித தெய்வங்கள் வாழும்

மானிடனுக்கான
சொர்க்கம்
என் கல்லூரி...............!

NMSSVN கல்லூரி

எழுதியவர் : ramakrishnan (12-Apr-12, 1:26 pm)
பார்வை : 375

மேலே