என் நண்பனுக்கு திருமண வாழ்த்துக்கள்.....
(என் நண்பனின் திருமணத்திற்காக,இது கவிதையில் நான் தொடுக்கும் வாழ்த்து)
நல்லறம் என்னும் தூரிகையில்
இல்லறமதை கவிதையாய் தொடுத்து,
வாழ்வெனும் நீள் பாதை பயணத்தில்,
ஒருவர் கரம் ஒருவர் இறுக பிடித்து,
ஒற்றை தலையணையில்
ஓராயிரம் கனவு திணித்து,
பெண்மை என்னும் புது கவிதை,
தாயெனும் மரபு கவிதையாய் துளிர்த்து,
பூ மழலையொன்று புதிதாய் சேரும்
உங்கள் பூ மலர் சோலையிலே
ஆண்டு முழுதும்
புது வசந்தம்,
இளந்தென்றல்
வருடும் ஏகாந்தம்,
பூங்குயில்கள்
இசைக்கும் புது கீதம்,
பொன்வண்டுகள்
தொடுக்கும் ரிங்காரம்,
என்றும் நிறைந்திருக்க வாழ்த்தும்
உன் தோழன் உள்ளம்.....
அந்த சோலையில் என்றுமில்லை
இலையுதிர் காலம்.....