???

தலைப்பொன்று கொடுத்தால் மட்டும் விடை விளங்குமோ?
ஆம்! வழி தேடி அலைகிறேன் இவ்வொரு
நிலையற்ற வாழ்வை மன உறுதியுடன் கடப்பதற்கு!

இயற்கை!

இதன் உன்னதமான படைப்பு உயிரினம் அதனினும்
உன்னதம் அன்பினம் - இயற்கை கொடுத்த தோர்
தாய் தந்தை இவர்கள் ஏற்படுத்திய சொந்தபந்தம்
நாம் சேர்த்ததோர் அன்பின் கூட்டம்!

அன்பு!

உயிர் கொடுத்ததோ இயற்கை அவ்வுயிர்க்கு உயிர்
சேர்த்ததோ நம்மன்பு - இன்பங்கள் பல துன்பங்கள்
எதுவாயினும் நமக்கு வலுவாக தோல் கொடுக்கும்
நாம் சேர்த்த அன்பின் உறவது!

வாழ்க்கை!

இவ்வாறு பல உறவுகள் - தாய் தந்தை
நட்பு தாரம் சொந்தம் அனைத்தும் சேர்த்து
ஓர் அன்பான வாழ்க்கை நாம் ஏற்ப்படுத்தி
ஒரு அழகான வாழ்க்கை வாழ,

விதி!

பழையதோர் விதி புகுந்து புதியதோர் சீற்றம்
செய்து அவ்வழகான வாழ்வை அழுகையாய் மாற்றி
போதுமடா இந்தப் பொல்லாத நிலையற்ற வாழ்கை
என நாம் துயரப் பட,

கடந்தும் போனது!

அந்த துயர நிலையும் கடந்து போக
செல்கின்ற பாதையில் புதியபல நல்லுறவு அமைத்து
அன்பாய் வாழும் நேரத்தில் அதே பழைய
விதி மற்றுமோர் புதிய சீற்றம்

ஏன்?

இயற்கை அளித்ததோர் உயிர் அதில் நாம்
புகுத்தினோம் புற்றுயிர் - இவ்வன்பு சேர்த்ததோர் வாழ்கை
அதுவும் இனியதோர் வாழ்கை - அதில் விதியெனும்
புயல் புகுதலேன்? உறவுகள் விட்டுச்செல்வதும்

ஏன்?

இக்கேள்விக்கு விடை அறிந்ததே - இதுவும் கடந்து போகும்,
எனினும் அறிவிற்கு எட்டிய பதில் மனதிற்கு விளங்குமோ?
விடையொன்று கிடைத்தால் மட்டும் மனம் அதை ஏற்குமோ?

இதவரை பல அன்பு உள்ளங்கள் என் வாழ்வை
இந்த உலகை விட்டுப்ப் போனதின் நினைவில் எழுதுகிறேன்..

இவ்வெழுத்து அவ்வன்பு நெஞ்சங்களுக்கு சமர்ப்பணம்.

எழுதியவர் : விவேகானந்தன் (12-Apr-12, 9:32 pm)
பார்வை : 266

மேலே