பள்ளிதோழியே ...
வஞ்சனை இல்லாமல் நெஞ்சணைபோம்
தேடி வந்தது அல்ல
தேடாமல் கிடைத்த சுவர்க்கம் நீ ...
உணவை மட்டும் அல்ல
உள்ளதையும் பரிமாறினோம் ..
உணர்வுகளையும் வெளிபடுத்தினோம் ..
எனக்கே தெரியாமல்
என்னுள் இருந்த
கவிதையை ரசித்தெடுத்தாய் ...
கதைகள் கற்பனைகள்
எவ்ளவோ பேசினதும்
நம் கண்முன்னே நிழலாடுது ...
பசியோடு இருந்த வேளையிலும் ...
வெறுமையான பொழுதுகளிலும் ...
வேதனையான நேரங்களிலும் ...
உன் உள்ளங்கையின் அழுத்தம்
கைதூக்கி விட்டதல்லவா ...
தாங்கி நின்றதல்லவா ...
சிரிக்கையில் உள்ளத்தின் துக்கம்
தூங்கி போனது ...
மகிழ்ச்சியான நம் - பள்ளிநாட்கள்
தாக்கத்தோடு நினைவு கூருகிறேன்...
மங்கலான பல உருவங்கள்
வந்து மறைந்தாலும்
உன் சாந்தமுள்ள அந்த முகம்
நெஞ்சில் நிற்குதடி ...
உன் சிரிப்பின் சத்தம்
இதயத்தில் ஒலிக்குதடி ...
பழகிய நாட்கள் - யாவும் அமிர்தம்
பள்ளிதோழியே ...
இனியும் ஒரு
பள்ளிநாளுக்காய்
காத்திருக்கிறேன் ...
உன் நினைவால் ...
உன் தோழி ...