மலர்களே வாழ்த்துகள்

காலையில் விரிந்து
மாலையில் வதங்கும் மலர்களே
நம் வாழ்க்கை ஒரு நாள்தானே
என்ற சோகம் கொள்ளாமல்
ஒரு நாளே பெரும் யோகம்
இதுவே எங்களுக்கு போதும்
பூத்து குலுங்குவோம் நாள்பொழுதும்
என்றே மனநிறைவு மகிழ்ச்சியில்
புன்னகை இதழ்களை அகல விரித்து
நறுமணம் வீசிடும் பூக்களே
மகிழ்ச்சி வாழ்த்துகள் மலருங்கள்
உங்களின் நம்பிக்கையில் நானும்
புது வாழ்க்கை பாடம் பயின்றேன்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (13-Apr-12, 12:21 am)
பார்வை : 427

மேலே