நீ என்னை விரும்பாததால்..
உன் நினைவுகளை சுமக்கும்
என் இதயத்தை சிதைக்கும்
ஆயுதம் விரும்புகிறேன்...
உன் பெயரினை பதித்துள்ள
என் கைகளை - புகையிலை நெருப்பினால்
புண்ணாக்க விரும்புகிறேன்...
உன்னிடம் சொல்லாத என் காதலை
போதை பொருளிடம் சொல்லி
புலம்பிட விரும்புகிறேன்...
உனக்கு புரியாத என் காதலை
பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும்
பைத்தியமாக விரும்புகிறேன்...
பெண்ணே!
நீ என்னை சேர விரும்பாததால்
நான் மண்ணை சேர விரும்புகிறேன்...