தொப்புள்கொடி அடையாளம் ........
அம்மா உன் கருவறையில்
வாழ்ந்த நினைவு ஏதுமில்லை - எனக்கு
அதனாலதான் உன் மீது பாசமில்லை - எனக்கு,
எனக்காகவே நீ வாழ்ந்த நாட்கள் இருக்கலாம்
உன்னால் நான் வாழ்ந்திருக்கிறேன் உன்னால் வாழ்கிறேன்
உன்னை வாழவைக்க தெரியவில்லை - எனக்கு ,
அகாலத்தில்நான் அலறி அழும்போது
இரவெல்லாம் கண் விழித்து மார்பால் கொடுத்து
பாராட்டி சீராட்டி என்னை தூங்கவைத்ததாய் - பாட்டி சொல்வாள்
என் மகனிடத்தில் உன்னை பற்றி ஏதும் செல்வதில்லை - நான்,
அம்மா பசித்தபோதெல்லாம் சோறு போட்டாய்
இப்போது உன்னை பார்க்கவே பயப்புடுகிறேன்
எங்கே காசு கேப்பயோ என்று ,
புதிய உடையும் புத்தக பையும் வாங்கி கொடுத்தாய்
நீ கேட்ட புடவையை இன்னும் வாங்கி தரவில்லை - நான்,
மகள் பெயரில் புதிய வீடு கட்ட தெரிந்த எனக்கு
பழையதாய் போன உன் பெயர் கூட கசக்கிறது ,
மனைவி மடியில் படுத்தபடி மணிக்கணக்கில் கொஞ்ச முடிகிறது
உன் - கெஞ்சலான பேச்சு எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை ,
குடும்பத்திற்கு சொகுசு கார் வாங்கி வாசலில் நிறுத்திவிட்டேன்
உன் பயணத்திற்கு மட்டும் பஸஷே போதுமென நினைகிறேன்,
பணி புரியம் நிறுவன நலனுக்காய் நாள் எல்லாம் உழைக்கமுடிகிற
என்னால் -உன் நலனுக்காய் மாதத்தில் ஒரு நாள் கூட
ஒதுக்க முடியவில்லை ,
என்னை அழகுபடுத்தி அருகில் நிறுத்தி
அழகு பார்ப்பாய் - நீ -வயோதிகத்தில்
அழுக்காய் அவலட்சனமாய் ஆன - உன்னை
தூரமே நின்று வேடிக்கை பார்கிறேன் - நான் ,
சுண்டெலியாய் உன் கூடவேயிருந்து சுருட்டிகொள்ள தெரிந்த - நான்
உன்னிடத்தில் ஏதும் இல்லாத போதுஓடிவிட்டதில்
என்தவறு ஏதும் இல்லை,
வழி காட்ட ,வாழ வைக்க ,பாரட்ட,சீர் செய்ய,காசு கொடுக்க ,
கல்யாணம் வரை தேவை பட்டாய் - நீ
உடைய்ந்து போய் விட்ட ஏணி உன்னை - பரணில்
போடுவதுதானே உத்தமம் ,
மாமனாரும், மாமியாரும் ,மச்சானும் , மைத்துனியும்
மகிழ்வாய் வந்து போகும் - என் வீடு
உன் வரவுக்கு மட்டும் கதவு மூடி - எழவு காக்கிறது ,
அம்மா மனைவிக்கு பயப்புடும்
பெண்டை விட கேவலமான -எனை
ஆண் சிங்கமே என நீ - அழைத்தது எத்தனை மடமை,
அம்மா பசுவுக்கு - பச்சோந்தி பிறக்குமா?
பிறக்கும்
உனக்கு நான் பிறந்திருக்கிறேனே
வெள்ளை வேஷ்டிகட்டியவன்அரசியல்வாதி
வெண் சிரிப்புடன்
வெட்டி பேச்சு பேசும் - மகன் - வேஷதாரி ,
ATM கொட்டிகிடக்கிறது - பணம்
அதில் ஒரு நுறு உனக்கு கொடுக்க இல்லை -மனம் ,
எதிர் கால வம்சா வழியினருக்கு
வகையாய் சேர்த்து வைக்கிறேன் - சொத்தை
என் பக்க சொந்தங்களில் தீராத நோய் கொண்ட
நீ மட்டுமே - சொத்தை ,
அம்மா சுயநல பாயில்
சுருண்டு கிடக்கிறேன்
என் குல தெய்வம் - உன்னை
மறேந்தே போய் விட்டேன்
ஆனால் - இப்போது
எனை பார்த்தாலும்
''சாப்டாயா?'' - என கேக்கிறாய் ,
அம்மாதீவிரவாதிக்கு கூட
தாய் பாசம் இருக்கும்,
தாயை மறந்தவன்தான் - தீண்டதகாதவன்,
தொப்புள்கொடி அடையாளம்
இனி நெற்றியில் பதியட்டும்
அது - தாயை மறகிறவனை
தினம் -சுடும் .