தர்மம் காக்க - பகுதி 1; இறைவனிடம், A. பிரேம் குமார் -ன் வேண்டுகோள்
முடிவுடைய இப்பிறவியில்
முடிச்சுகள் பல
முடிவின் முடிச்சே
இப்படைப்பின் மூச்சு - அதுவும்
மெய்யைத் தவிர்த்த
பொய்யின் பேச்சு
பொய்யின் முடிவிற்கும்
முடிச்சுகள் இரண்டு - அதில்
காலம் ஒன்று
கழிக்கும்செய லிரண்டு
மறந்தான் இறைவன்
பிறந்த இவளையும்
பிணைத்த மந்திரச்சாவியோடு
தந்திர மரணமாயையின் சாயல்
சுயஅறிவுத் துளிரும்தருணம்
தறாது விடுத்தான்
தவற்றை இழைத்தான்
மாறாய்,
தன், தன்மக்கள்
சுயஅறிவு துளிரும்தருணம்
தருவா னேனால்
தயக்கம் பிறக்கும்
அநீதி குறைய,
தர்மம் தழைக்கும்!
- இக்கவிதையை, பல நல்லோர்களின் நலம் காக்க, இறைவனின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி நான் சமர்ப்பிக்கிறேன், அவரும் கவிதையின் பொருளை மறுஆலோசனை செய்திட.
- A. பிரேம் குமார்
கவிதையின் பொருள்:
ஒவ்வொருவரின் சுயஅறிவு செயல்படத் துவங்கும் தருணத்தில், அவனுக்கோ/அவளுக்கோ பிற்காலத்தில் நடக்கவிருக்கும் தன் (கொடூரமான) மரணத்தை, ஒரு சாயலாக (தந்திரமான மாயையுடன் குழப்பிகுழப்பாது) கண்ணெதிரே மிகச்சில வினாடிகளே ஓடவிடப்படுமானால், கண்டிப்பாக தவறு செய்ய நினைத்தாலே தயக்கம் பிறக்கும். அநீதியும் குறையும், தர்மமும் தழைக்கும்.
குறிப்பு: தன் மரணத்தின் சாயல் மட்டுமல்லாது, தனக்கு பிறந்து, சுயஅறிவு செயல்படத்துவங்கிய நிலைஎட்டிய மகன்/மகளின் மரணச் சாயலையும் சேர்த்து. ஆதலால்தான், கவிதையில்,
"தன், தன் மக்கள் சுயஅறிவு துளிரும்தருணம்" என்று குறிப்பிட்டுள்ளேன்.
குறிப்பு 2 : கவிதையில்,
''மெய்'' என்பது உயிரைக் குறிக்கும்
''பொய்'' என்பது உடலைக் குறிக்கும்