அன்பு சகோதரனுக்கு அஞ்சலி

எழுதத்துடிக்கும் என் கைகளில்!
இன்று மட்டும் புது நடுக்கம் புகுந்து!
புலம்புகிறது! பேனா முனை!

என் கண்ணீரை மையாக்கி!
உயிர்தனை கருவியாக்கி!
உணர்வால் எழுதுகின்றேன்!
மூளைச்சாவு வந்து!
மாண்டுபோன!
என் அண்ணனுக்கு அஞ்சலியை!

என் தாயின் கருவறையில்!
எனக்கு முன்பு குடியிருந்தவன்!
என் தாயின் மடி சுரந்த பாலை!
எனக்காக! என் பசிக்காக!
மிச்சம் வைத்தவன்!

எனக்கு நடைபழக்கி!
அண்ணன் என்று அவனை
அழைக்க பழக்கி!
அண்ணனாய்!
ஆருயிர் தோழனாய்!
என் மீது அதிகமான!
அன்புகொண்ட நேசனாய்!
நெஞ்சமெல்லாம் நின்றவன்!

என் குடும்பத்தின் குறைதீர்க்க!
பிறந்தவன்!
கனவுகள் பல கண்டு!
நிறைவேறாமல்!
குறைந்து போய்விட்டான்!
குடும்ப எண்ணிக்கையில்!

இது காலம் செய்த பாவமா!
இல்லை காளன் கொண்ட பாசமா!
இல்லை கடவுள் செய்த மோசமா!

கண்ணீர் சிந்துகின்றேன்!
என் நினைவுகளில்!
அவன் நினைவுகள் நீந்துவதால்!
என் சகோதரத்துவம்!
இன்று சகோதரசவமாய்!

நல்லதோர் வீணை!
அது நலன் கெட!
புழுதியில் எரிந்துவிட்டோம்!
இல்லை!
மின்சார சிதை மூட்டி!
எரித்துவிட்டோம்!

என்று தணியுமோ!
அவன்!
எங்களுக்குள் மூட்டிவிட்ட!
தணல்!

உன் கனவு நிச்சயம்
வெல்லும்!
காலம் பதில் சொல்லும்!
கண்ணீரோடு முடிக்கின்றேன்!
இந்த கவிதாஞ்சலியை.

எழுதியவர் : குணசேகரன்.K (16-Apr-12, 1:47 am)
பார்வை : 16162

மேலே