உன் மடியே சொர்க்கம்...?

இளமையிலே தாய் தந்தை கடவுள் என்றிடுவர்-அவர்களின்
முதுமையிலே இவன் செய்வதை கடமை என்றிடுவர்.
மருத்துவங்கள் செய்வதற்கு மனம் கசந்திடுவர்-அவர்கள்
மறைந்த பின்பு மாய்ந்து, அழுது, கண்ணீர் வடிதிடுவர்.
முகத்தை மறந்து முதியோர் இல்லம் தேடி சேர்த்திடுவார்-தன்
முக்திக்காக கோவில் குளம் ஏறி இறங்கிடுவர்.
இருக்கும்போது கேட்ட உணவை தர மறந்திடுவார் -அவர்கள்
இறந்த பின்பு விரும்பியதை முன் படைத்திடுவார்.
இருக்கும்போது நல்ல வார்த்தை எதுவும் பேசவில்லை-அவர்கள்
இறந்தவுடன் 'நா' வற்ற இரைந்து பேசிடுவார்.
செய்ய வேண்டிய பணியனைத்தும் விரைந்து செய்திடுவாய்-அவர்கள்
செத்த பின்பு நீ செய்தால் அவர்களுக்கு என்ன பயன்...?
தாயின் மடியில் வளர்ந்து வந்த தங்க மகானடா-நீ
அவர்கள் தளரும் போது உன் மடியே அவர்களுக்கு சொர்க்கமடா...!

எழுதியவர் : பசுவைஉமா (16-Apr-12, 9:26 am)
பார்வை : 468

மேலே