இனிக்க இனிக்க கவிதை..!!
நாவினிக்க கரும்புச்சாறு
பாவினிக்க கருத்துச்சாறு
இராகம் சிறக்க குரலோசை
கவிதை சிறக்க சொல்லோசை
ஓவியத்திற்கு வண்ணம் அழகு
பாடலுக்கு வடிவம் அழகு
மண்ணுக்கு பொன்புதையல் சிறப்பு
பண்ணுக்கு சொல்புதையல் சிறப்பு
இனிக்க இனிக்க கவிதை படைப்போம்
இரசித்து இரசித்து வாழ்வைக் குடிப்போம்..!!