தேர்தல்

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
வந்திடும் திருவிழா
மக்களே இந்நாட்டு மன்னர்கள்
என்றே சாற்றிடும் மக்களாச்சி பெருவிழா
ஆள்பவர்களை பாராட்ட வழிகாட்ட
தண்டிக்க மக்களின் கையிலிருக்கு
வாக்குயென்ற துருப்புசீட்டு - இது
தூக்கிஎறியும் துருபுடித்த தலைவர்களை
புது முத்திரையிட்டு புதிய ஆட்சிக்கு
மக்களாச்சி மலர்ச்சிக்கு வழிகாட்டும்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (16-Apr-12, 2:03 pm)
சேர்த்தது : athainiscap
பார்வை : 331

மேலே