திருமணம்
இரு மனங்கள்
இணைந்திட மலர்ந்திடும்
திருமணம்
புரிதலில் மலர்கள் தொடுத்து
இனிய மாலைகள் சூடிடும்
மங்களம்
இன்பம் துன்பம் - என
இனி அனைத்திலும் நாம் ஒன்றே
என்று முழங்கிடும் மேள வாத்தியம்
இருவர் இங்கே
தன்னலம் துறந்து இணைந்து
ஒருவராகும் அதிசியம்
அன்பால் இல்லம் அமைத்து
நம்பிக்கை விளக்கேற்றி
தொடங்கிடும் புது குடும்பம்
வண்ண கனவுகளை தாங்கி
விரிந்திடும் இல்வாழ்வு என்றும்
நல்வாழ்வாக தழைக்கட்டும்