பிரிவு

எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி .
என்னையும் நீயாக
உணர்வாய் என்று நம்பினேன் -- நீ
பலவற்றை உணர்ந்தவள்
என்பதை அறியாமல் .
எனது நட்பின் ஆழம்
அதிகம் என்று நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்
நான் யாரிடமிருந்தும்
சிரிப்பை பெற்றதில்லை
எப்பொழுதும் சிரித்துக் கொண்டே
இருப்பதால் -அதில் எனக்கு
பஞ்சமில்லை .
முதல் முறையாக
உன்னிடம் இருந்து
அழுகையை பெற்றேன்
அது என்னிடம் இல்லாமல்
போனதால்.
நல்லதோ கெட்டதோ
பிரிவின் சோகம்
என்பது
என்னக்கு மட்டும் தான்.....
-மழைக்காதலன்