நலமான வாழ்வு

கருக்கல் கலையும் போதே
துள்ளி குதித்து துயில் கலைந்திடு
உற்சாக காற்றை - காலை
பொழுதினிலே சுவாசித்து மகிழ்ந்திடு
உடல் பயிற்சி செய்தே
உடல் உள்ள சோர்வை அகற்றிடு
இறைவனை தொழுதிடு நம்பிக்கையில்
புதிய நாளை தொடங்கிடு
சுறுசுறுப்பை அணிந்துக் கொண்டு
பம்பரமாய் சுழன்று
நாள் பொழுதும் உழைத்திடு
உண்மைகள் உதடுகள் உதிர்த்திட
நன்மையை எங்கும் விதைத்திடு
உலக செய்திகள் அறிந்திடு
உதவியென்றால் ஓடி செய்திடு
மனம் மகிழ பேசி
உண்டு உறவாடி வாழ்ந்திடு
பொழுதை இனிதே முடித்து
இரவில் அயர்ந்தே உறங்கிடு
நேரத்தை மதித்து - நீ
வாழ கற்றுக் கொண்டால்
உடல் உள்ள ஆன்ம சுகமும்
மதிப்பு மிகுந்த வாழ்வும்
என்றும் உனக்கு உண்டு

எழுதியவர் : ஆ. தைனிஸ் (17-Apr-12, 1:38 am)
பார்வை : 503

மேலே