தீ கருக்கிய தீந்தமிழர்களும் கார் காரர்களும்.....!

பெருநகரச் சாலைகளின்
புழுதி பறக்கும்
வெயில் ஒழுகும் மதியப்
பிரயாணங்களின் நீட்சி
வீட்டின் கட்டிலுக்கு உடலைத்
தாரை வார்த்த பின்னும்
உள்ளங்காலில் பறக்கும்
அனலாய்.......
காலணியோ உருகிய மெழுகாய்....
நகக்கண் வழியே
தீ தன் நாவு நீட்ட
சாலைத் தார் முழுதும்
உச்சந்தலையில் ஒழுக
மனம் அம்மணமாய்
ஓடிச் சென்று
ஒரு ஓடையில்
விழுந்து விடவாய்த் தகிக்கிறது....
பேருந்துச் சன்னல் வழியே
என் விழி பதிவு செய்த
இரு காட்சிகள்.......
ஒன்று காதல் கார் காரர்கள்.......
மற்றொன்று
காலனுக்குக் கடன் பட்ட
வீதி வாழ் மலட்டுக்
கூட்டம் வெயிலில்
தாரோடுருகி சாலை செப்பனிட்டது.......

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை.

எழுதியவர் : நெ.ஹரீஷ் (18-Apr-12, 3:39 pm)
சேர்த்தது : Hareeshmaran
பார்வை : 262

மேலே