கவிஞனின் கவனத்திற்கு ...

தத்துவங்கள் தவழ்ந்த கவிதைகள் -அன்று
ததும்பும் காமரச கவிதைகள் இன்று
அணங்கின் அங்கத்தை அற்புதமாய் வர்ணிக்கிறான்
பாரதத் தாயின் அற்புதத்தை கூற மறுக்கிறான்.
இது ஏனோ ?
பண்பாடும் பச்சிளம் குழந்தை வாயில்
பரதேசி சாப்பாடாய் பலபல பாடல்கள் !
தேசிய பண் பாட வேண்டிய குழந்தையின் வாயிலே
கேட்க கூசும் பாடல்கள்
கவிஞனே!படைத்திடு கவிதையை காற்றாய்!
புத்தொளி கீற்றாய்!
நன்னீர் ஓடும் நீரூற்றாய்!
அள்ளி தெளித்துவிடு அருமை கருத்துகளை.......
நாளைய சமூக மாற்றம் உன் பேனாவில் இருக்கும் சீற்றம்!

எழுதியவர் : கவி.உதயா.G (19-Apr-12, 12:56 am)
பார்வை : 220

மேலே