ஜனாதிபதி அப்துல் கலாம்...

புதிய பாரதத்தை உருவாக்....கலாம் -ஒரு
புண்ணிய பூமியை உருவாக்....கலாம்..
நதிகள் அனைத்தையும் இனைவாக்....கலாம்
நாடுகள் செழிக்க நாம் வழிவகுக்....கலாம் ...


இளைஞர்கள் எழுந்து அணிவகுக்....கலாம்-அவர்கள்
இந்திய நாட்டிற்க்கு புகழ் சேர்க்....கலாம்...
களைகள் சிலவற்றை சேர்ந்தழிக்....கலாம்
கடுமை உழைப்பை நம் கருவாக்....கலாம்


கனவினை மெதுவாய் செயலாக்....கலாம்-பிறர்
கருத்துக்கள் பல கொண்டு புதிதாக்....கலாம்..
நினைவினைக் கண்கொண்டு தொழிலாக்....கலாம்
நித்தம் நித்தம் அதை நாம் செய்விக்....கலாம்


உழைப்பைக் கொஞ்சம் காசாக்....கலாம்-இதை
ஊருக்கெல்லாம் தெரிவிக்....கலாம்...
பிழைப்புக்கு வழிகள் பல கிடைக்....கலாம்
பிறர் பிச்சைகள் எடுப்பதை நாம் தடுக்....கலாம்..


புதிதாய் கோள்களை உண்டாக்....கலாம்-நாம்
புன்னகை கொண்டே புகழ் சேர்க்....கலாம்
சதிகள் பல உண்டு, அதை முறியடிக்....கலாம்
சண்டைகள் இன்றி நாம் சாதிக்....கலாம்..


உழைத்து உழைத்து இளைக்....கலாம்-உன்
உண்மைப் பண்பால் சிறக்....கலாம்.
களைத்து களைத்து வியர்க்....கலாம்-ஆனந்த
கண்ணீர் வந்து மகிழ்விக்....கலாம்


அண்டை நாட்டை நட்பாக்....கலாம்-நாம்
அன்புகள் அனைத்தையும் வித்தாக் ....கலாம்..
பண்டைய பாரதப் பண்பாக்....கலாம்
பாசமழை பொழிந்து, வரும்-பகை போக்....கலாம்..


பாரதம் வேகமாய் பலமா....கலாம்-உடன்
பகைவரை ஒரு "கை" நாம் பார்க்....கலாம்
தீரமாய்ச் செய்தால் பகைநீக்....கலாம்
தினம் இதை நம்திரு நாளாக்....கலாம்


கணினித்துறையிலும் கால் வைக்....கலாம்-இந்தியக்
கடன்கள் யாவையும் நாம் அடைக்....கலாம்
இனி நன்றாய் நாமும் யோசிக்....கலாம்
இந்திய நாட்டை நாம் பூஜிக்....கலாம்


பணமழை பொழிவதை நீ பார்க்....கலாம்-நாட்டிற்கு
பலனும் கைமேல் உடன் கிடைக்....கலாம்-இதை
குணமாய்ச் சொன்னார் நமக்....கலாம்-நம்
குடியரசுத் தலைவர் அப்துல்....கலாம்..

இனி நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்..

எழுதியவர் : பசுவைஉமா (19-Apr-12, 1:13 am)
பார்வை : 445

மேலே