பொன்மொழி (பிரியாராம் )

உன்!
பலவீனத்தை புரிந்துகொள்
முழுபலத்தையும் அறிவாய்

*********************
அலட்சியபடுத்தாதே!
அனுபவித்து கூறுபவன் முட்டாளாயினும்
அவன் சொல்லை அலட்சியபடுத்தாதே .

**************************
ஏங்காதே ,ஏங்காதே எதற்கும் ஏங்காதே
தேவையெனில் நல்லதையெல்லாம்
உன்னுடையதாக்கிகொள்.

******************************
கணினியையும் கைபேசியையும்
கண்ட நேரத்தில் கையில் எடுக்காதே .

******************************
தினம் தேதியை கிழிக்கும்போது -நேற்று
நீ செய்த நல்ல காரியத்தை நினைவுகூர் .

********************************

மூத்தோர் சொல்லை முன்னே கேள்
நீ சொல்வதை பின்னே சொல் ..

*******************************
காதலிக்கும் முன் யோசி காதலித்தபின்
காதலியை(னை) மட்டும் நேசி

******************************

----பிரியாராம் ------

எழுதியவர் : பிரியாராம் (21-Apr-12, 4:07 pm)
பார்வை : 906

மேலே