நான் யார்?

தழைய தழைய புடவை கட்டி ,தலை நிறைய பூ வைத்தேன்;
கை இரண்டிலும் வளையல் மாட்டி அது குலுங்கும் ஓசையில் மயங்கி நின்றேன்;
அச்சம் , மடம், நாணத்துடன் வெட்கத்தையும் சுமந்து வந்தேன் ;
பெண் என்ற கனவுக்குள்ளே கோட்டை ஒன்றை கட்டி வந்தேன் ,
கனவை கலைத்த அம்மா சொன்னாள், " எந்திரிடா , ஆம்பள பையன் இப்படியா தூங்குவ? " !!!

எழுதியவர் : புவனா (23-Apr-12, 12:32 am)
சேர்த்தது : கனகா
பார்வை : 263

மேலே