[206 ] தாடிக்குள் தேள்...!

சிற்றுளி கையில் தந்துச்
சிலைவடி என்று சொன்னீர்!
பற்றுளே என்னைப் பற்றப்
பாவியேன் பகிர்தல் எண்ணாச்
சிற்றறி வாளன் ஆனேன்!
சிறுமையின் அடிமை யானேன்!
சிற்றுளி கொண்டே, நீரும்
செய்தவை அழித்து நிற்பேன் !

தேடிச்செல் கின்ற தெல்லாம்
தேவையென் றாகிப் போமோ?
நாடிக்கை வந்த தெல்லாம்
நன்மைக்கென்று எண்ணப் போமோ?
தாடிக்குள் தேளை வைத்தே
தடவிக்கொண் டிருக்கப் போமோ?
'மூடிக்கண் பாரேன்" என்றால்
மூர்க்கன்,என் நிலைதான் என்ன?

சோடித்த வாழ்க்கை வேண்டாம்!
சுகங்களின் நினைப்பே வேண்டாம்!
வேடிக்கை மனித னென்று
வெளி,உலகு இகழ்தல் வேண்டாம்!
பாடிக்கை தட்டி யுன்னைப்
பரவிட மறத்தல் வேண்டாம்!
மூடிக்கை களுக்குள் என்னை
முற்றிலும் எடுத்துக் கொள்!வா!
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (23-Apr-12, 10:48 am)
பார்வை : 207

மேலே