உங்க பையனாக எண்ணி....

மதுக்கடையில்
பணி செய்ய
திணிக்கப்பட்ட
பையன்...மதுவகையின்.... அதற்கு
வாய்க்கு
இதமான.... உணவு
வகைகளின்
ஆங்கிலப்
பெயர்களை....
தமிழில்
ஆத்திசூடி
சொல்வதுபோல
சொல்கிறான்.... காரணம்
அங்கே
அவனுக்கு......

மேசைக்கு ஒரு
ஆள்
என்று
ஒருசில சில்லறைகள்

டிப்ஸ்.... என சொல்லி...
வைச்சுக்க என சொல்லி...

அவன் கண்ணில்
காண்பிக்கப்
படுகிற
ஊதியம் தான்....!

மதுக்கடைக்கு
போவோர்
எல்லாம்...தாங்கள்
காணும்
காற்சட்டைப்
பையனை.... சீருடை
போட்டு
பள்ளி
போக
சொல்லி
பக்குவமாய்
சொல்லிவிட்டு.... நல்லது
செய்தோம்
என எண்ணி சந்தோஷப்
படுங்கள்....!!

எழுதியவர் : thampu (23-Apr-12, 4:28 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 215

மேலே