சேஷாத்திரி சுவாமிகள்

நீயும் நானும்
நினைவில் நிஜமாய்
வாழ்ந்திடுவோம் ;
மேலும் மேலும்
உயிரில் உணர்வாய்
இருந்திடுவோம்;
உன்னை தேடி
தவிப்பதுவும்,
உன்னை நாடி
இருப்பதுவும்
என் மனதின்
இயல்பு;
விண்ணை தாண்டி
இருப்பதுவும்,
விண்ணாய் மாறி
இருப்பதுவும்
உன் மனதின்
இயல்பு;
இயல்பாய் என்றும்
இருப்பவரே,
இறைவன் கண்டு
உணர்ந்தவரே;
வருக நீ , அருள்
புரிக நீ ;
வாழ்க சேஷாத்திரி !
வாழ்க வளமுடன் !