!!! தமிழர்களின் பூர்வீகம் இலங்கை !!!

இலங்கை என் தாய்நாடு என்று சொல்ல ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் இலங்கை என் தாய்நாடு என்று சொல்லிக்கொள்ள ஒரு சிங்களவனுக்குகூட தகுதி இல்லை என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்துகொள்ள வேண்டும், ஈழப்போரில் நம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை போல் சரித்திரத்தை யாராலும் கொன்று புதைத்துவிட முடியாது, பெரிய பெரிய அறிவு ஜீவிகளையும், சிந்தனையாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், பேராசிரியர்களையும், புத்தி கூர்மையாளர்களையும், தொலைநோக்கு பார்வையாளர்களையும், உலக அரசியல் சட்டம் அறிந்தவர்களையும், ஊடக நிபுணர்களையும், தொலைதொடர்பு அதிகாரிகளையும், தமிழ் மரபு அறிந்தவர்களையும், தமிழ் ஆதரவு பத்திரிக்கையாளர்களையும் தேடிபிடித்து கைது செய்தார்கள் சிங்கள வெறியர்கள், இதில் பலர் தானே வந்து சரணடைதவர்களும் உண்டு, இப்படி கைது செய்யபட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் சிங்க அரசு என்ன செய்ததென்று தெரியாமல் மர்மமாகவே இருந்து வந்தது, இதை பற்றி பலர் கேள்வி எழுப்பியும் சிங்கள அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை, அண்மையில் ஒரு ஊடகத்தில் அவர்கள் அனைவரும் இறுதி போரில் இறந்துவிட்டதாக சிங்க அரசு அப்பட்டமாக கூறியுள்ளது,
கைது செய்யப்பட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் சிறையில் அடிப்பதுதானே முறை, ஆனால் அந்த முறையை மீறி தமிழின் முக்கிய தூண்களான பலரை சிங்கள வெறியர்கள் கொன்று குவித்துவிட்டார்கள், அதனால் இன்று ஈழத்திலே தமிழர்களை தாங்கி பிடிக்க தூண்களின்றி தமிழர்கள் அல்லாடிகொண்டும் தள்ளாடிகொண்டும் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், இதையே காரணம் காட்டி இப்பொழுது தமிழர்களை வழிநடத்த விபரம் தெரிந்த தமிழ் அறிஞர்கள் யாருமில்லை, இருந்தவர்களெல்லாம் இறந்துவிட்டார்கள், அரசியல் பாங்கு அறிந்தவர்கள் எவரும் இல்லை, எஞ்சிய ஒருசிலர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள், சிங்களவர்கள்தான் எங்களை ஆள்வதற்கு சரியானவர்கள் என்று கொழும்பில் இருந்து ஒரு சிங்கள ஆதரவாள தமிழன் தினமலர் பத்திரிகையில் பதிவு செய்து உள்ளான் என்பது வருந்ததக்கது.
இது ஒருபுறமிருக்க, கி. மு 543 களுக்கு முன்பு இலங்கையும் இந்தியாவும் கடலினால் பிரிக்கப்படாத ஒரே நில பரப்பாகவே இருந்து வந்தது, தற்பொழுதைய இலங்கைக்கும் குமரிக்கும் இடையில் மூழ்கிப்போன பகுதியை லெமுரிய கண்டம் என்றும் மற்ற சில பெயர்களும் உண்டு ஆழமில்லாத பகுதிகளான இவையே ராமர்பாலம் என்றும் கூறப்படுகிறது, இதற்கு வலுவான ஆதாரம் திரு பி. குணசேகரா வின் ராஜவளி, இலங்கா இதிகாசயா போன்ற நூல்களிலும், மாணிக்கவாசகர் சரிதையிலும், ஸ்ர்ஸ்காட் எலியட்டின் மறைந்துபோன தீவுகள் என்ற நூலிலும் பதிவு செய்ய பட்டுள்ளன.
சிங்களவர்கள் வருகைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் பழங்குடி மக்கள் இலங்கையில் வசித்து வந்தார்கள், இவர்கள் தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ் மட்டுமே பேச தெரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இலங்கை தமிழர்களின் பூர்வீக சொத்து என்பதற்கும், இடையில் வந்த வந்தேறிகள்தான் சிங்களவர்கள் என்பதற்கும் திரு சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி இரண்டாம் பாகமும், திரு பூர்ணலிங்கம் பிள்ளையின் இலங்கை சக்கரவர்த்தி ராவணன் என்ற நூலும், திரு கந்தையா பிள்ளையின் தமிழகம் என்ற நூலும், அகத்தியரின் இலங்கை என்ற நூலும், மாணிக்கனாயனாரின் நாவணாசம் என்ற நூலும் முக்கிய ஆதாரமாக உள்ளன.
இலங்கை தமிழர்களின் பூர்வீகம் என்பதற்கும் அது இந்தியாவோடு இணைந்துதான் இருந்தது என்பதற்கும் திரு மெண்டிஸ் என்பவரின் உலக சரித்திரமும் இலங்கை சரித்திரமும் என்ற நூல் மேலும் வலுவான ஆதாரமாக உள்ளது.
விஜயன் என்ற மன்னன் வந்த பிறகுதான் அங்கு சிங்கள வர்க்கம் தலைதூக்கியது, அதற்கு முன் அங்கு குலோதரன், ராவணன், மகாசேனன், போன்ற தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ராமாயணமும் ஒரு சான்று.
இப்படி சொந்த நாட்டிலேயே மண்ணுக்கு சொந்தமானவர்களை கொன்று குவித்து, இன படுகொலை செய்து, அடக்குமுறைகளை கையாண்டு, அதிகார வர்க்கத்தை நிலைநாட்டி ஆணவத்தால் கொக்கரித்துகொண்டு நிற்கும் சிங்கள கும்பலை நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது, இந்த நவீன காலத்தில் நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தன என்பதை என்னும்பொழுது நெஞ்சம் வெடிக்கிறது. ஈழத்தில் இருந்து கடல்வழி மார்க்கமாக வரும் காற்றில் இன்னும் நம் மக்களின் பிணவாடை அடிக்கிறது, அரசியல்வாதிகளின் நாடகம் தொடர்கிறது, தமிழீழ தாகத்திற்கு கானல் நீர் தர கபடம் நடக்கிறது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பு எங்கள் ஊர் சிண்டுகார தாத்தாவின் கோவணத்தைபோல் காணாமல் தேடுகிறோம்.
விழித்துக்கொண்டு இருக்கும்பொழுதே விழிகள் பிடுங்கப்பட்டதும் ஆண்மை அறுக்கப்பட்டதும் வீரத்தமிழனுக்கு பேரவமானம்.
இனியும் உறங்க வேண்டாம்
இன்னல்கள் சுமக்க வேண்டாம்
யாருக்கும் அடங்க வேண்டாம்
அடிமையை ஏற்க வேண்டாம்
உரிமையை மீட்டெடுப்போம்
விழித்தெழு தமிழினமே விழித்தெழு.....
(இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான நாடு என்பதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்)