எங்கே செல்கின்றது இவ் உலகம் ????

"பணம் பணம் பணம்" ........
பிணமாகும் வரை
இது தான் பிரணவ மந்திரம்.

மூச்சு பயிற்ச்சிக்கு பணம்
நண்பர்களுடன் உரையாட பணம்
மண வாழ்க்கைக்குள் நுழைய பணம்
வேலை பெற பணம்
இறைவனை தரிசிக்க பணம்

மன அழுத்தத்தால்
மாண்டு இவ் உலகை விட்டு பிரியலாம் என
பிரயாணத்தை தொடர்ந்தேன் ....

சாலை விபத்தில் சிக்கியதால்
காவலர்களிடம் அபராதமாய் பணம் ....

அவல நிலையை பார்த்து சட்ட படி
மனு போடலாம் என நினைத்தால்
வக்கீல்கள் வாய் கூசாமல் கேட்கும் பணம் ...

முதலமைச்சரிடம் முறையிடலாம் என
முழு முயற்சியுடன் இறங்கினேன்.
முதலைமைச்சரை பார்க்க அனுமதி கொடுக்க பணம் ....

எங்கே செல்கின்றது இவ் உலகம் ???

நல் மனம் இல்லாமல்
பணம் பார்பவர்களை
குறி வைக்கின்றான்
இன்னொரு கயவன் .....

வரலாறு திரும்பும் .....

எழுதியவர் : kirupaganesh, nanganallur (25-Apr-12, 5:44 pm)
பார்வை : 239

மேலே