கண்ணிர்த் தாய்

பெண்ணாக பிறந்தேன் நான்
மங்கையாக மாறவேண்டும் என்று
என் உற்றார் உறவினர்
மனமில்லா மனதுக்கு
திருமணம் செய்துவைத்தார்கள்!
கணவனோ போதைக்காரன்
அவன் உறவினரோ பேதைக்காரர்கள்
தொலைந்தது என் பாதை
கண் போன போக்கில்
சென்றான் என் – மாதவன்,
மாதங்கள் கழிந்தன
இப்பொழுது நான் ஆறு
மாதம் கர்பம்.
பனிக்கொடையில் நீர் இல்லாமல்
கண்ணில் நீருடன் என்
வாழ்கையின் அர்த்தத்தை
பெற்றேன்.
கணவனால் கைவிடபட்ட நானோ
ஒர் கைம்பெண்,
உறவுகளாலும் கைவிடபட்ட நானோ
ஒர் அகதி
கையில் வைத்திறுப்பது இருபது ரூபாய்
என் வயதோ இருபது நிரைவடையும் நேரம்
என் மகனின் வயதோ இருபதில் கால்வாசி
பெண்ணின் காம உறுப்புகள்
என்னிடம் நிலைகுலையாமல்
இருக்க வேண்டும் என்று நினைத்
நான் துளசியாக வேண்டினேன்.
காலம் மாறி
பணமே வாழ்க்கையானது
உலகிற்க்கு.
பசியால் வாடிய என் குழந்தைக்கு
பால் இல்லை பணத்தால்.
அவன் பசியை தீர்க
மற்றவரின் மோகபசியை தீர்த்தேன்
வாழ்கையில் ஒர் மாற்றம்
பணம் சேர்ந்தது
உறவுகள் சேர்ந்தன
பின்னர் வயது போனது
பணம் போனது
உறவுகளும் போனது
வாழ்கையும் போனது.
துளசியாக வேண்டும் என்று நினைத்து
தாசியாக மாற்றிய காம பார்வை கொண்ட
ஆண்களே, பெண்களின் கற்பு
அழிந்தாலும்
மனதால் அவர்கள் கற்புக்கரசி.
சோர்வடைய வில்லை நான்
ஆனால்
மனதில் ஏக்கம்
ததும்பியது கண்ணிர்த் துளிகள்
நான் இறந்தால்
கணவன் மடியில் உயிர்
துறக்கவேண்டும் என்று
என்னினேன்
ஏனென்றால் நாளை
நான் இறந்தால்
என் மகன் அனாதை ஆவனோ என்று.
கண்ணிருடன்
மறுமலர்ச்சிக்காக காத்துக்
கொண்டிருக்கும்
அன்னையான பெண்.