என் இனிய காதலியே..!!

நீ அருகில் இருக்கவேண்டுமென்று ஆசைப்படவில்லை
ஆனாலும் உன்னைவிட்டு விலகிப்போகவும் மனமில்லை

உன்னை அனைத்திடவேண்டுமென்று ஆசைப்படவில்லை
ஆனாலும் உன்னோடுவரும் கனவுகளைக்கலைக்க மனமில்லை

நாம் ஒருவரைவொருவர் தொட்டுக்கொள்ளவேண்டுமென்று ஆசைப்படவில்லை
ஆனாலும் அறியாமல் படுவதுபோல் படும்பாகங்களை விளக்க மனமில்லை

உன்னை நினைத்து உருகிஉருகித் துடித்திட ஆசையில்லை
ஆனாலும் எப்போதும் வரும் உன் நினைவுகளை விளக்க மனமில்லை

உன்னோடு நான் ஒவ்வொரு நொடியும் இருக்க விருப்பமில்லை
ஆனாலும் உனக்காகவே ஒவ்வொரு நொடியும் போவதைத்தடுக்க மனமில்லை..!!

எழுதியவர் : சீர்காழி. சேதுசபா (1-May-12, 3:56 am)
பார்வை : 428

மேலே