"வெற்றியின் வாசல் தேடி "!

வெற்றியின் விலாசத்தை தேடி !

ஓடினேன் தேடினேன்
வாய்ப்புகள் என்னைவிட வேகமாய் ,
கிடைத்த வாய்ப்புகளில் கூட
எத்தனை போட்டிகள் ,
மரபுகளுக்கான வாய்ப்புகளில்
அங்கே மண்டியிட்டு மாண்டுபோகிறது
உண்மையான தகுதி !

உழைப்பை ஒதுக்குகிறான் ,
உண்மையை மறைக்கிறான் ,
தலைவிரித்தாடும் லஞ்சத்தில்
தகுதி என்பது காசாகிவிட்டது !

படிக்க முடிந்தது ,
உழைக்க முடிந்தது ,
இருந்தும் பணம் மட்டும் ,
என் கையில் எட்டாத கனியாகவே !

தடைகள் ஆயிரம் ,
தன்னம்பிக்கை ஒன்றே துணை ,
பொறாமை உலகத்தில் ,
போட்டியிட ஆளிருந்ததே தவிரே
ஏற்றிவிட ஆளில்லை ,
இருந்தும் முயற்சியோடு போராடினேன் ,
ஏறியது ஜான் ,
இறங்கியதோ முழம் !

வாழ்க்கை படிக்கட்டுகளில்
படிகள் எல்லாம்
பணம் தானோ ,
ஏற காத்துகொண்டிருக்கிறேன் ,
அங்கே
படிகளைதான் காணோம் !

அனுபவம் கொண்டேன் ,
கடின உழைப்பும் கொண்டேன்
திடமான உள்ளம் கொண்டேன் ,
உறக்கம் மறந்தேன் ,
இருந்தும் எல்லாம் பொய் நின்றதெல்லாம் ,
பணத்தின் வாசல் தேடி !

காசு மட்டுமே கடவுளான உலகத்தில்
பெட்டிக்கடை கூட என்னை ஏளனமாய் பார்க்கையில்
என்னை பெத்தவர்கள் மட்டும் என்ன மிச்சமா !

மூலதனம் இல்லாமல்
முதல் போடா முடியுமா ,
என்ன செய்வது ,
ஏழை வீட்டில் செயற்கையாக
பிய்த்து வைத்து காத்திருக்கிறேன் ,
கூரைகளை,
பணமழையின் வருகைக்காக !

ஊரார் கேலி ,
உற்றார் போதனைகள் எல்லாம் கிடைக்கையில் ,
பணம் கேட்டால்மட்டும்
எல்லோரும் ஒரே மாதிரி ,
நான் கை கூப்பி கேட்டபோதெல்லாம்
அவர்கள் கைவிரித்ததுதான் மிச்சம் !

படிப்பு ,
உழைப்பு ,
அனுபவம்,
ஆர்வம் எல்லாம் இருந்தும்
என்னை தகுதி இல்லாதவனாக
தரம் பிரித்து வேடிக்கை பார்க்கிறது பணம் !

இறைவன் ,
சிலரை உடலில் ஊனம் வைத்தான் ,
சிலரை உள்ளத்தில் ஊனம் வைத்தான் ,
என்னை மட்டும் ,
பணத்தில் நிரந்தர ஊனமாகிவிட்டான் !

மீன் குட்டி கூட எதிர்நீச்சல் போடும்போது ,
பறவை குஞ்சுகள் பறக்க கற்றுக்கொள்ளும்போது ,
முடிவு தெரிந்தும் முயற்சித்து தோற்கும்
பீலிக்ஸ் பறவைபோன்று,
நானும் முயற்சிக்கிறேன் ,
இன்றல்ல எவருடையதாக
வேண்டுமானாலும் இருக்கட்டும் ,
நிச்சயம் நாளை என்னுடையதாக இருக்கும்!

முயற்சிகள் என்னை கைவிட்டு இருக்கலாம்
முயற்சிகளை நான் கைவிட்டதில்லை ,
எத்தனை தடைகள் வந்தாலும்
என் இதயம் தாங்க பழகிக்கொண்டது ,
என்னால் முடித்தவரை முயற்சிக்கிறேன் ,
என் இறுதி மூச்சுவரை முயற்சிப்பேன் ,
"வெற்றியின் வாசல் தேடி "!

எழுதியவர் : வினாயகமுருகன் (1-May-12, 8:30 am)
பார்வை : 399

மேலே