காமமும் காதலும்

எல்லையில்லா ஆகாயம்
அளவில்லா இன்பம்
நிரந்தரம், காதல்போல்.

ஈர்த்த கடலினை கோர்த்து,
எல்லைகட்டின மேகங்கள்
உருமாறும் தரிசனம்.

அற்ப ஆயுள் கொண்ட மேகம்
சொற்ப ஒளிகொண்ட வானை
அசுத்தப்படுத்தமுடிவதில்லை.

நிலை மாற்றம் கொண்டிருக்கும்
அவை, நிறைக்கமுடிவதுமில்லை.
அதுவே காமமும் காதலினைப்போல்

எழுதியவர் : thee (2-May-12, 11:46 am)
பார்வை : 213

மேலே