தெய்வமும் காதலே

குழந்தையாய், வாலிபனாய்,
காதலனாய், வயோதிகனாய்,
நினைவுகள், உடலுறையுனுள்
உறங்கியுறைந்திருக்கும் நம்முள்.

இந்த மாறாத,மாற்றமுடியாத
அலைகளின் மையம்,
உரைத்துநிற்குமே ஒரு
அமைதி, அது நிரந்தரமாய்.

தொட்டதும் துள்ளியெழும்,
விட்டதும் வீழ்ந்து அழும்,
எண்ணமுடியா சோகம் எழும்,
மையத்தில் ஆனாலும் அமைதிதான்

சக்கரம் சுழலும் வேகமாய்,
அச்சாணி நிற்பது மையமாய்,
உச்சானிக்கொம்பின் சோகமும்
சுழலுவதென்னவோ அன்புமைத்திலே.

சுற்றிச் சுற்றியடிக்கும் புயலிலும்
மையம் சலனமில்லா அமைதிதான்
மையத்தில் வாழ்வையிட்டால்
மெய்யிலும் தெய்வமே, காதலே.

எழுதியவர் : thee (2-May-12, 11:29 am)
பார்வை : 187

மேலே