ரொம்ப கொடுமை சார்

வெயிலின் தாக்கம்
கடற்கரைக்கு சென்றேன்!

இரு சக்கர வாகனம்
நிறுத்தும் இடத்தில!

என் வாகனத்தை
நிறுத்தி விட்டு சென்றேன்

கடற்கரையின் காற்றை
சவாசித்து விட்டு

வாகனத்தை நிறுத்திய
இடத்திற்கு வந்தேன் !

என் வாகனத்தை
காணவில்லை !

திருடர்கள் திருடி இருப்பார்களோ
என்று பயந்து நின்றேன்!

அருகில் உள்ள
காவலரிடம் கேட்டேன்

அவரோ தம்பி
இது நோ பார்கிங் ஏரியா

உனது வண்டியை
டோப்பிங் செய்து விட்டார்கள் என்றார்

இது நோ பார்கிங் ஏரியா
என்று போடவில்லை வினாவினேன்!

அதற்கு அவர் இன்று முதல்
அமுலுக்கு வந்தது என்றார்

ஒ திருடியவர்கள்
இவர்கள் தான் என்று சுதாரித்து கொண்டேன்

என் வண்டியை மீட்க
ஐஸ் ஹவுஸ் காவல் துறைக்கு சென்றேன்

அங்கு
என் வாகனத்தை எடுத்தவரிடம்

வாகனத்தை கேட்டேன்
அவரோ அபராதம் என்றார்

எவ்வளவு என்றேன்
அவரோ பில் வேண்டும் என்றால் 250

பில்
வேண்டாம் என்றால் 150 என்றார்

இவர்களின்

கடமை

கண்ணியம்

கட்டுபாட்டிற்கு அளவே இல்லை
என்று திகைத்து நின்றேன்!

வெயிலின் கொடுமை விட

இவர்களின்
கொடுமை அதிகம் என்று வேர்த்து நின்றேன்!

இது என்ன கொடுமை சார்
என்று

நானே எனக்குள் சொல்லி சுதாரித்து கொண்டேன்

எழுதியவர் : thilakraj (3-May-12, 3:13 pm)
Tanglish : romba kodumai saar
பார்வை : 795

சிறந்த நகைச்சுவைகள்

மேலே