ரோஜா
உனக்காக நட்டுவைத்து வளர்த்தேன்
ஒரு ரோஜா செடியை
மலர்ந்தபின் உனக்கு கொடுக்க
அதை பறிக்க மனம் வரவில்லை
அது உன்னை போலவே அழகாய் இருந்ததால்
தேட முடியவில்லை நான் தொலைத்த நட்சத்திரங்களை
அவள் பார்வை என்மீது படுதல் நின்ற பிறகு
தாமதமாகவே உணர்ந்திருக்கிறேன்
பார்வையாய் இருந்தாளென்று