!!! நான்காவது ''கிறுக்கல்கள்'' !!!

இறைவன் மிக பெரியவன்
மாசில்லா மனிதன் அதைவிட பெரியவன்
இவர்கள் இருவரையும்விட
தாய் மிக பெரியவள்...
= = = # # # = = =
நான்
காதலை மதிப்பவன்
காமத்தை மிதிப்பவன்!
நட்பிற்கு உயிர்கொடுப்பவன்
நம்பிக்கை துரோகத்தை வேரறுப்பவன்...
= = = # # # = = =
இந்த வாழ்க்கையை வெறுத்து
எங்கே நீ ஓடிவிடுவாய்...???
ஓடு... ஓடு... ஓடு...
எவ்வளவு தூரம் ஓட முடியுமோ
ஓடிகொண்டே இரு!
உன் ஓட்டத்தின் முடிவில் - நீ
எங்கிருந்து ஓட தொடங்கினாயோ
அதே இடத்தில்தான்
மறுபடியும் வந்து நிற்பாய்...
அப்பொழுதும் உனக்கான உன் வாழ்க்கை
அதே இடத்தில்
உனக்காகவே காத்து கொண்டு இருக்கும்...
= = = # # # = = =
நமக்கான நமது வாழ்க்கையை
நம்மாலின்றி
வேறு யாராலும்
வாழ்ந்துவிட முடியாது...
= = = # # # = = =
உன் நடை பாதையில்
பூக்கள்
தூவப்பட்டு இருக்கிறதென்று
இறுமாப்பு கொள்ளாதே!
பூக்களுக்கு அடியில் முட்கள்
பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம்
கவனமாக செல்...

''பொல்லாத உலகமிது''
= = = # # # = = =
உனது நடை பாதையில் கிடக்கும்
முட்களை
தாண்டி சென்றதும்
ஒதுங்கிச் சென்றதும் போதும் - அதை
எடுத்து ஓரம் வீசிவிட்டு செல்!
உனக்கு
பின்னால் வருபவர்களில்
யாராவது
செருப்பணியாமலோ அல்லது
குருடாகவோ இருக்கக்கூடும்...
= = = # # # = = =
நட்பு போதிமரம்
காதல் அரளி மரம்!
போதிமரத்தில் நன்மைகள் மட்டுமே இருக்கிறது
அரளி மரத்தில்
நன்மைகளும் தீமைகளும் கலந்திருக்கிறது...
= = = # # # = = =
என் சமூகம் உனக்கு
முன்பாகச் செல்லும் என்பது
பொதுநலவாதிகளின் பொன்மொழி!
என் சமூகம் உனக்கு
முரண்பாகச் செல்லும் என்பது
அரசியல்வாதிகளின் அடைமொழி...
= = = # # # = = =
''ஆயுதம் ஏந்து''
வன்முறைகாக அல்ல!
உன்னை நீ
தற்காத்து கொள்வதற்காக...
= = = # # # = = =
துணிச்சலின்றி போராட்டமில்லை
போராட்டமின்றி உரிமை இல்லை...
= = = # # # = = =
''கவனாகி போனது வாழ்க்கை''
நீ
உறங்குவதற்காக
செலவிட்ட நேரங்களில்...
= = = # # # = = =
''வழக்கமாகிவிட்டது''

ஐந்து ஆண்டு
ஆட்சியின் முடிவில்
கஜானாவை சுத்தமாக
வழித்து நக்கிவிட்டு போவது...
= = = # # # = = =
உனது வெற்றிகளை
நிர்ணயிக்கும்
தோல்விகளுக்கும்
தோள்கொடு! - உன்னை
வீரனாக வடிவமைக்கும் - உன்
எதிரிகளையும் நேசி...
= = = # # # = = =
பூக்களுக்கு அழத்தெரியாது
ஆனால்
இங்கே...
அழாத மனிதனே கிடையாது...
= = = # # # = = =
காலத்தை
வாழ்க்கைக்காக
செலவிடும் நேரங்களைவிட - இங்கே
காதலுக்காக
அதிகமாக செலவிடப்படுகிறது...

''காலதேவனின் கணக்கு''
= = = # # # = = =
ஆயிரம் அறிவாளிகளில்
கடைசி அறிவாளி நான்!
ஆயிரம் முட்டாள்களில்
முதல் முட்டாள் நான்...
= = = # # # = = =
நீ கல்லா...???
உளிகளுக்கு
உரிமை கொடு...

நீ மரமா...???
வேர்களுக்கு
வழி விடு...

நீ மலையா...???
தென்றலுக்கு
செவி கொடு...

நீ மழையா...???
மண்ணிற்குள்
கரைந்திடு...

நீ சமுத்திரமா...???
கரைகளுக்கு
சாமரம் வீசு...

நீ மனிதனா...???
ஒழுக்கத்திற்கு
உயிர்கொடு...!!!
= = = # # # = = =
- - - தொடரும் - - -

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (7-May-12, 12:12 pm)
பார்வை : 243

மேலே